பார்வையற்றோர் மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்; இந்தியாவில் அடுத்த ஆண்டு நடக்கிறது
பார்வையற்றோருக்கான முதலாவது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2025) இந்தியாவில் நடைபெறுகிறது.
புதுடெல்லி,
பார்வையற்றோருக்கான முதலாவது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2025) இந்தியாவில் நடைபெறுகிறது. சமீபத்தில் பாகிஸ்தானில் நடந்த ஆண்களுக்கான பார்வையற்றோர் டி20 உலகக் கோப்பை போட்டியில் இருந்து பாதுகாப்பு பிரச்சினையால் இந்திய அணி விலகியது.
இதனால் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் மகளிர் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி கலந்து கொள்வதில் சிக்கல் நிலவுகிறது. இதனால் பாகிஸ்தானுக்குரிய ஆட்டங்களை நேபாளம் அல்லது இலங்கையில் நடத்துவது என்று முல்தானில் நடந்த உலக பார்வையற்றோர் கிரிக்கெட் கவுன்சில் பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.