சிட்னி டெஸ்ட் : புதிய சாதனை படைத்த பும்ரா

பார்டர் கவாஸ்கர் தொடரில் பும்ரா மொத்தமாக 32 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்;

Update: 2025-01-04 06:58 GMT

சிட்னி,

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் சிட்னியில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 185 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக பண்ட் 40 ரன்கள் அடிக்க, ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்காட் போலன்ட் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா, இந்திய பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 181 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக வெப்ஸ்டர் 57 ரன்கள் அடித்தார். தரப்பில் சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா தலா 3 விக்கெட்டுகளும், பும்ரா, நிதிஷ் ரெட்டி தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர். பின்னர் 4 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியுள்ளது.

இந்த போட்டியில் 2 விக்கெட் வீழ்த்தியதால் நடந்து வரும் பார்டர் கவாஸ்கர் தொடரில் பும்ரா மொத்தமாக 32 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் . ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்டுகள் (31) வீழ்த்திய இந்திய வீரர் பிஷன் சிங் பேடியின் 47 ஆண்டுகால சாதனையை ஜஸ்ப்ரித் பும்ரா (32)முறியடித்துள்ளார் . 

Tags:    

மேலும் செய்திகள்