வங்காளதேசத்தில் மகளிர் டி20 உலகக்கோப்பையை விளையாடுவது தவறான செயலாகும் - ஆஸ்திரேலிய வீராங்கனை

வங்காளதேசத்தில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக டி20 உலகக் கோப்பை தொடரை வேறு இடத்திற்கு மாற்ற ஐ.சி.சி திட்டமிட்டுள்ளது.

Update: 2024-08-19 12:07 GMT

image courtesy;twitter/@ICC

மெல்போர்ன்,

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வங்காளதேசத்தில் அக்டோபர் 3ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெறும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) அறிவித்திருந்தது. ஆனால், தற்போது வங்காளதேசத்தில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக டி20 உலகக் கோப்பை தொடரை வேறு இடத்திற்கு மாற்ற ஐ.சி.சி திட்டமிட்டுள்ளது.

டி20 உலகக்கோப்பை தொடரை இந்தியாவில் நடத்த பி.சி.சி.ஐ மறுப்பு தெரிவித்துவிட்டது. இந்நிலையில், யு.ஏ.இ, இலங்கை, ஜிம்பாப்வே ஆகிய 3 இடங்களில் ஏதாவது ஒன்றில் உலகக்கோப்பை தொடர் நடைபெறலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் வங்காளதேசத்தில் டி20 உலகக் கோப்பையை விளையாடுவது தவறான செயலாகும் என ஆஸ்திரேலிய மகளிர் அணி கேப்டன் அலிசா ஹீலி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, இந்த நேரத்தில் அங்கு [வங்காளதேசத்தில்] விளையாடுவதை நான் புரிந்துகொள்வது கடினமாக உள்ளது, அது தவறான செயலாக இருக்கும் என்று நான் உணர்கிறேன்.

தற்போது வங்காளதேசத்தில் கிரிக்கெட் போட்டியை நடத்துவதை விட பெரிய காரணிகள் விளையாடுகின்றன. உலகக் கோப்பை தொடர் வங்காளதேசத்தில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, எங்களை பெரிதும் பாதிக்காது என்று நான் நினைக்கிறேன். நாங்கள் நன்கு தயாராக இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்