ஒருநாள் கிரிக்கெட்; ஆறுதல் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ்... தொடரை கைப்பற்றிய இலங்கை

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக எவின் லீவிஸ் 102 ரன்கள் எடுத்தார்.

Update: 2024-10-27 03:07 GMT

image courtesy; AFP

பல்லகலே,

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடியது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இலங்கை கைப்பற்றியது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான ஒருநாள் தொடரில் முதல் இரு ஆட்டங்களில் இலங்கை வெற்றி பெற்றது.

இவ்விரு அணிகள் இடையிலான கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. மழை காரணமாக இந்த ஆட்டம் 23 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை 23 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 156 ரன்கள் எடுத்தது. இலங்கை தரப்பில் அதிகபட்சமாக பதும் நிசாங்கா, குசல் மெண்டிஸ் தலா 56 ரன்கள் எடுத்தனர்.

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ரோஸ்டன் சேஸ், ஷெர்போன் ரூதர்போர்டு தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து டி.எஸ்.எஸ் முறைப்படி வெஸ்ட் இண்டீஸ்க்கு 23 ஓவர்களில் 195 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இந்த இலக்கை நோக்கி ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 22 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 196 ரன்கள் எடுத்து ஆறுதல் வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக எவின் லீவிஸ் 102 ரன்கள் எடுத்தார். இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றாலும், 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை இலங்கை கைப்பற்றியது.

Tags:    

மேலும் செய்திகள்