டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர் நியமனம்

பாகிஸ்தான் அணியின் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான தலைமை பயிற்சியாளராக இருந்த கேரி கிரிஸ்டன் இன்று பதவி விலகினார்.

Update: 2024-10-28 13:50 GMT

image courtesy: AFP

லாகூர்,

பாகிஸ்தான் அணி சமீபத்தில் சொந்த மண்ணில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றது. இதையடுத்து பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்கான பாகிஸ்தான் அணிக்கு முகமது ரிஸ்வான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், பாகிஸ்தான் ஒருநாள் அணி மற்றும் டி20 அணியின் தலைமை பயிற்சியாளரான கேரி கிர்ஸ்டன் பதவி விலக உள்ளார். அவர் கடந்த ஜூன் மாதம் முதல் பாகிஸ்தான் ஒருநாள் அணி மற்றும் டி20 அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். அவரது தலைமையில் பாகிஸ்தான் அணி டி20 உலகக்கோப்பையில் லீக் சுற்றுடன் வெளியேறியது.

மேலும் கேரி கிரிஸ்டன் எடுத்த முடிவுகள் பலவற்றுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு ஒத்துழைக்கவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகியுள்ளார். இவரது ராஜினாமாவை பாகிஸ்தான் நிர்வாகமும் ஏற்றுக்கொண்டுள்ளது.

இவரது விலகலை அடுத்து ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான பாகிஸ்தான் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ஜேசன் கில்லெஸ்பி நியமிக்கப்பட்டுள்ளார். கில்லெஸ்பி ஏற்கனவே பாகிஸ்தான் அணியின் டெஸ்ட் போட்டிகளுக்கான தலைமை பயிற்சியாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்