ஐ.பி.எல்: மும்பை இந்தியன்ஸ் பீல்டிங் பயிற்சியாளராக இங்கிலாந்து முன்னாள் வீரர் நியமனம்

10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். தொடர் அடுத்த ஆண்டு (2025) மார்ச் 14-ந் தேதி முதல் மே 25-ந் தேதி வரை நடக்கிறது.;

Update:2024-12-13 19:46 IST

image courtesy: PTI

மும்பை,

10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். தொடர் அடுத்த ஆண்டு (2025) மார்ச் 14-ந் தேதி முதல் மே 25-ந் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி வீரர்கள் ஏலம் ஆகியவை சமீபத்தில் நடந்தது. இந்த ஏலத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி 18 வீரர்களை வாங்கியது. இதற்கு முன்பாக மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் யாதவ், பும்ரா, ரோகித் சர்மா மற்றும் திலக் வர்மா ஆகிய 5 வீரர்களை தக்கவைத்தது.

ஏலத்தில் ராபின் மின்ஸ், வில் ஜேக்ஸ், ரியான் ரிக்கெல்டன், டிரெண்ட் பவுல்ட் உள்ளிட்ட வீரர்களை வாங்கியது. 5 முறை சாம்பியனான மும்பை அடுத்த ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றி ஐ.பி.எல் கோப்பையை அதிக முறை வென்ற அணி என்ற சாதனையை படைக்க காத்து கொண்டுள்ளது.

இந்நிலையில், எதிர்வரும் ஐ.பி.எல் தொடரில் மும்பை அணியின் பீல்டிங் பயிற்சியாளராக இங்கிலாந்து முன்னாள் வீரரான கார்ல் ஹாப்கின்சனை நியமித்துள்ளதாக மும்பை அணி தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கார்ல் ஹாப்கின்சன் 2019 ஒருநாள் உலகக்கோப்பை, 2022 டி20 உலகக்கோப்பையின் போது இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் குழுவில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags:    

மேலும் செய்திகள்