ஐ.பி.எல். 2025: கொல்கத்தா - பெங்களூரு ஆட்டத்தில் மழை குறுக்கிடுமா..? புதிய வானிலை அறிக்கை கூறுவது என்ன..?

ஐ.பி.எல். தொடரின் முதல் ஆட்டத்தில் கொல்கத்தா - பெங்களூரு அணிகள் மோதுகின்றன.;

Update:2025-03-22 12:59 IST
ஐ.பி.எல். 2025: கொல்கத்தா - பெங்களூரு ஆட்டத்தில் மழை குறுக்கிடுமா..? புதிய வானிலை அறிக்கை கூறுவது என்ன..?

கொல்கத்தா,

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் இன்று தொடங்குகிறது. கடந்த 2008-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த தொடர் 18-வது ஆண்டாக வீறுநடை போடுகிறது. இதுவரை நடந்துள்ள 17 தொடர்களில் அதிகபட்சமாக சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் தலா 5 முறை கோப்பையை கைப்பற்றியுள்ளன.

இந்த நிலையில் 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இன்று (சனிக்கிழமை) தொடங்கி மே 25-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்த ஆட்டம் மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. மேற்கு வங்காள மாநிலத்தில் கொல்கத்தா உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மழையால் கொல்கத்தா அணியினரின் பயிற்சி பாதிப்புக்குள்ளானது. இதனால் இந்த ஆட்டம் திட்டமிட்டபடி நடைபெறுமா? என்ற அச்சம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

இந்நிலையில் தற்போது வெளியான வானிலை அறிக்கையின்படி, கொல்கத்தாவில் மாலை 6 மணிக்கு மேல் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் குறைவு என்று கூறப்பட்டுள்ளது. அத்துடன் அங்கு தற்போது வெயில் அடிப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் இந்த ஆட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த செய்தி ஐ.பி.எல். ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்