சீண்டிய தீபக் சாஹர்.... பதிலடி கொடுத்த தோனி - வைரலாகும் வீடியோ

சென்னையில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பையை வீழ்த்தி சி.எஸ்.கே அபார வெற்றி பெற்றது.;

Update:2025-03-24 17:11 IST
சீண்டிய தீபக் சாஹர்.... பதிலடி கொடுத்த தோனி - வைரலாகும் வீடியோ

Image Courtesy: @IPL / @ChennaiIPL / X (Twitter) / File Image 

சென்னை,

ஐ.பி.எல். தொடரில் சென்னையில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் தலா 5 முறை சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை 20 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 155 ரன்கள் எடுத்தது. மும்பை தரப்பில் அதிகபட்சமாக திலக் வர்மா 31 ரன்கள் எடுத்தார்.

சென்னை தரப்பில் நூர் அகமது 4 விக்கெட்டும், கலீல் அகமது 3 விக்கெட்டும் வீழ்த்தினர். தொடர்ந்து 156 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சென்னை 19.1 ஓவரில் 6 விக்கெட்டை மட்டும் இழந்து 158 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை தரப்பில் அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 65 ரன்னும், ருதுராஜ் 53 ரன்னும் எடுத்தனர்.

இந்த போட்டியின் போது தோனி மற்றும் ஜடேஜாவை முன்னாள் சி.எஸ்.கே. வீரரும், தற்போது மும்பை அணியில் ஆடி வரும் தீபக் சாஹர் ஜாலியாக சீண்டிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த 7 சீசன்களாக சென்னை அணிக்காக விளையாடிய தீபக் சாஹர் இந்த முறை மும்பை அணியில் விளையாடுகிறார்.

இந்த நிலையில் தோனி பேட்டிங் செய்ய வரும் போது, அவர் அருகில் சென்று எதோ கிண்டல் செய்யும் விதமாக தீபர் சாஹர் பேசினார். ஆனால், தோனி அதை கண்டுகொள்ளாமல் பேட்டிங் செய்தார். அதன் பின்னர் போட்டி முடிந்து செல்லும்போது தோனியிடம் தீபக் சாஹர் சிக்கினார். அப்போது தோனி அவரை விளையாட்டுத்தனமாக மட்டையால் (பேட்) அடிக்க முயற்சி செய்வார்.

அதில் இருந்து தீபக் சாஹர் தப்பித்து விடுவார். அதனை சிரித்தப்படியே தோனி கடந்து செல்வார். தோனி மட்டுமல்லாமல் ஜடேஜா பேட்டிங் செய்ய வரும் போது அவரையும் தீபர் சாஹர் கிண்டலடிப்பார். அப்போது ஜடேஜா பேட்டால் அவரை தாக்குவதுபோல் செய்கை செய்வார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 




Tags:    

மேலும் செய்திகள்