ஐ.பி.எல்.2025: 10 அணிகளின் கேப்டன்களுடன் பி.சி.சி.ஐ. இன்று ஆலோசனை.. முக்கிய முடிவு எடுக்கப்பட வாய்ப்பு

இந்த ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.;

Update:2025-03-20 11:48 IST
ஐ.பி.எல்.2025: 10 அணிகளின் கேப்டன்களுடன் பி.சி.சி.ஐ. இன்று ஆலோசனை.. முக்கிய முடிவு எடுக்கப்பட வாய்ப்பு

image courtesy:twitter/@IPL

மும்பை,

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல். வெற்றிகரமாக 17 சீசன்களை நிறைவு செய்துள்ளது. இதன் 18-வது சீசன் வருகிற 22-ம் தேதி தொடங்க உள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைட்சர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 10 அணிகள் கலந்து கொள்கின்றன. இதன் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோதுகிறது.

இதனை முன்னிட்டு இந்த தொடரில் பங்கேற்க உள்ள 10 அணிகளின் கேப்டன்களுடன் இன்று (மார்ச் 20-ம் தேதி) ஆலோசனை கூட்டம் நடத்த பி.சி.சி.ஐ. ஏற்பாடு செய்திருந்தது. அதன்படி மும்பையில் உள்ள பி.சி.சி.ஐ. தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ள இந்த ஆலோசனை கூட்டத்தில் 10 அணிகளின் கேப்டன்கள் மற்றும் மேலாளர்கள் கலந்து கொள்ள அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பந்தின் மீது எச்சில் தேய்க்க விதிக்கப்பட்ட தடையை நீக்குவது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 10 அணிகளின் கேப்டன்களின் முடிவை பொறுத்தே இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்று பரவிய கால கட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பந்தின் மீது எச்சில் தேய்க்க தடை விதிக்கப்பட்டது. தற்போது கொரோனா அச்சுறுத்தல் இல்லாத நிலையில் இந்த தடை நீக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்