மகளிர் கிரிக்கெட்; நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடர்... ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டர் விலகல்
ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் ஆடி வருகிறது.;

image courtesy; twitter/@ICC
கான்பெர்ரா,
ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி நாளை நடக்கிறது. இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான எஞ்சிய டி20 தொடரில் இருந்து ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டர் ஆஷ்லே கார்ட்னெர் விலகி உள்ளார். நேற்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா பந்துவீசிய போது ஆஷ்லே கார்ட்னெர் வலது கை நடுவிரலில் காயம் அடைந்தார்.
இதன் காரணமாக அவர் பேட்டிங் செய்யவும் வரவில்லை. இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான எஞ்சிய டி20 தொடரில் இருந்து ஆஷ்லே கார்ட்னெர் விலகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக 22 வயதான சார்லி நாட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.