ஐ.பி.எல். 2025: பெங்களூரு அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த ஆகாஷ் சோப்ரா.. யாருக்கெல்லாம் இடம்..?
நடப்பு ஐ.பி.எல். தொடருக்கான பெங்களூரு அணியின் பிளேயிங் லெவனை ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார்.;

image courtesy:twitter/@RCBTweets
கொல்கத்தா,
கிரிக்கெட் ரசிகர்களை மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கி இருக்கும் ஐ.பி.எல். டி20 தொடரின் 18-வது சீசன் இன்று தொடங்க உள்ளது. இந்திய வீரர்கள் மட்டுமின்றி, வெளிநாட்டு முன்னணி வீரர்களும் இணைந்து விளையாடுவதால் இந்த சரவெடி கிரிக்கெட்டுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் அமோக வரவேற்பு உண்டு.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. முன்னதாக கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் தொடக்க விழா அரங்கேறுகிறது.
இந்நிலையில் இந்த தொடருக்கான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பிளேயிங் லெவனை இந்திய முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்து அறிவித்துள்ளார்.
ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்த பெங்களூரு அணியின் பிளேயிங் லெவன் பின்வருமாறு:-
விராட் கோலி, சால்ட், ரதஜ் படிதார் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டன், ஜிதேஷ் சர்மா, ஜேக்கப் பெத்தேல் அல்லது டிம் டேவிட், குருனால் பாண்ட்யா, ஜோஷ் ஹேசில்வுட், புவனேஸ்வர் குமார், யாஷ் தயாள், சுயாஷ் சர்மா.
இம்பேக்ட் வீரர்: படிக்கல், ரசிக் டார் சலாம், மனோஜ் பண்டாகே.