சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி பங்கேற்க வேண்டும் - ஐ.சி.சி.யிடம், பாகிஸ்தான் வலியுறுத்தல்

8 அணிகள் பங்கேற்கும் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ளது.

Update: 2024-07-24 01:36 GMT

கோப்புப்படம்

கராச்சி,

8 அணிகள் பங்கேற்கும் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு பிப்ரவரி, மார்ச்சில் நடக்கிறது. பாதுகாப்பு பிரச்சினையை காரணம் காட்டி இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என்று தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இந்திய அணியை எப்படியாவது பாகிஸ்தானுக்கு வரவழைக்க வேண்டும் என்பதில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தீவிரமாக உள்ளது.

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணை மற்றும் அதில் இந்திய அணி விளையாடும் இடம், போட்டியை நடத்துவதற்கான செலவுத் தொகை விவரம் உள்ளிட்டவைற்றை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி.) பாகிஸ்தான் சமர்பித்துள்ளது.

போட்டி அட்டவணையை இறுதி செய்யுமாறு வலியுறுத்தியுள்ள பாகிஸ்தான், இந்திய அணியை போட்டியில் பங்கேற்பதற்கு சம்மதிக்க வைக்கும்படியும் ஐ.சி.சி.யிடம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்த விஷயத்தில் ஐ.சி.சி. எந்த மாதிரி முடிவு எடுக்கப்போகிறது? இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் வேறு நாட்டுக்கு மாற்றப்படுமா? என்பது விரைவில் தெரிய வரும்.

Tags:    

மேலும் செய்திகள்