5வது டி20 போட்டி: இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற ஜிம்பாப்வே பந்துவீச்சு தேர்வு

இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 5வது டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது.

Update: 2024-07-14 10:35 GMT

ஹராரே,

சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரில் இதுவரை 4 ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில் 3-1 என்ற கணக்கில் இந்தியா தொடரை கைப்பற்றிவிட்டது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான 5வது மற்றும் கடைசி டி20 போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சிக்கந்தர் ராசா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்