தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டி20; பாகிஸ்தான் அணி 206 ரன்கள் குவிப்பு
பாகிஸ்தான் தொடக்கம் முதல் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தது;
சென்சூரியன்,
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20, 3 ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதலில் டி20 தொடர் நடந்து வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி சென்சூரியனில் இன்று நடக்கிறது.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது . அதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிகை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் தொடக்கம் முதல் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தது . இதனால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு பாகிஸ்தான் அணி 206 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணியில் சிறப்பாக விளையாடி சைம் ஆயுப் 98 ரன்கள் எடுத்தார். இதனை தொடர்ந்து 207 ரன்கள் இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி விளையாடுகிறது.