காதலிக்க மறுத்த இளம்பெண் மீது பெட்ரோல் ஊற்றி கொலை மிரட்டல்; இருவர் கைது
அர்ஜுன் 18 வயது இளம்பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.;
சென்னை,
சென்னையில் உள்ள பூக்கரை பகுதியில் 18 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இதே பகுதியில் வசித்து வருபவர் அர்ஜுன் (வயது 20). அர்ஜுன் 18 வயது இளம்பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு அந்த இளம்பெண் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நேற்று இரவு இளம்பெண் பணியை முடித்துவிட்டு வால்டாக்ஸ் சாலையில் நடந்து வந்தபோது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த அர்ஜுன் அவரை வழிமறித்து அவர் மீது பெட்ரோல் ஊற்றி, தன்னை காதலிக்கவில்லை என்றால் கொலை செய்திடுவேன் என மிரட்டியுள்ளார்.
இதனால் பதறிப்போன இளம்பெண் யானைக்கவுனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார், புகாரை ஏற்ற போலீசார் அர்ஜுன், சம்பவத்தின்போது அவருடன் இருந்த ஜேம்ஸ் (வயது 20) ஆகியோரை கைது செய்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், சம்பவத்தின்போது பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.