ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு நாளை தொடக்கம்

மதுரை ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு நாளை தொடங்குகிறது.;

Update: 2025-01-05 10:48 GMT

மதுரை,

மதுரை மாவட்டத்தில் பாலமேடு, அவனியாபுரம், அலங்காநல்லூர் ஆகிய கிராமங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலகப்புகழ்பெற்றவை. இதில் முக்கியமாக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி வரும் 16 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்த நிலையில், மதுரை ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுகள் மற்றும் மாடுபிடி வீரர்களுகான முன்பதிவு நாளை(6.01.2025) தொடங்குகிறது. ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் இணையத்தில் முன்பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாடுபிடி வீரர்கள் மற்றும் கலந்து கொள்ளும் மாடுகளின் பதிவுகளை madurai.nic.in இணையதளம் மூலம் பெயர்கள், மாடுகளின் விவரங்களை பதிவு செய்ய மதுரை மாவட்ட நிர்வாகம் அறிவுரை வழங்கியுள்ளது.

விதிமுறைகள்:

ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளும் மாடுகள் ஜல்லிக்கட்டு நடைபெறும் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஆகிய 3 கிராமங்களில் ஏதாவது ஒரு கிராமத்தில் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படும்.

மேலும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ள காளையுடன் ஒரு உரிமையாளர் மற்றும் காளையுடன் நன்கு பழக்கமுள்ள ஒரு உதவியாளர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

பதிவு செய்தவர்களின் சான்றுகள் சரிபார்க்கப்பட்டபின் தகுதியான நபர்களுக்கு மட்டுமே டோக்கன்களை பதிவிறக்கம் செய்ய அனுமதிக்கப்படும்.

ஜல்லிக்கட்டு நடைபெறும் நாட்கள்:

அவனியாபுரம் : ஜன.14

பாலமேடு : .15

அலங்காநல்லூர் : ஜன.16

மதுரை ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு நாளை(6.01.2025) மாலை 5.00 மணி முதல் ஜன 7-ம் தேதி மாலை 5 மணி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்