கட்சிப் பொறுப்பில் இருந்து விடுவிக்க கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை
கே.பாலகிருஷ்ணன் தன்னை கட்சி பொறுப்புகளில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.;
சென்னை,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், கட்சி பொறுப்புகளில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பு சட்ட விதிகளின்படி 72 வயதுக்கு மேல் ஒருவர் எந்தவிதமான பொறுப்புகளிலும் நீடிக்க முடியாது.
கே.பாலகிருஷ்ணனுக்கு அடுத்த மாதம் 72 வயது ஆக உள்ளதால், தன்னை கட்சி பொறுப்புகளில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். விழுப்புரத்தில் நடைபெற்ற கட்சியின் மாநில மாநாட்டில் தன்னை பதவிகளில் இருந்து விடுவிக்குமாறு அவர் கோரிக்கை விடுத்தார். இந்த நிலையில் விழுப்புரம் மாநில மாநாட்டில் இன்று மாலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அடுத்த மாநில செயலாளர் அறிவிக்கப்படுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.