தலைமைச்செயலகம், டிஜிபி அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

தலைமைச்செயலகம், டிஜிபி அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2025-01-05 05:45 GMT

சென்னை,

தமிழக தலைமைச்செயலகம், டிஜிபி அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர் தலைமைச்செயலகம், டிஜிபி அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் விடுத்தார்.

இதையடுத்து, தலைமைச்செயலகம், டிஜிபி அலுவலகத்தில் போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. இதனை தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்