டங்ஸ்டன் சுரங்கம் வராது: பொங்கலுக்கு பின் மத்திய அரசு அறிவிக்கும் - அண்ணாமலை

எந்த காரணத்திற்காகவும் டங்ஸ்டன் திட்டம் வராது என அண்ணாமலை தெரிவித்தார்.;

Update:2025-01-10 20:04 IST

மதுரை,

டங்ஸ்டன் சுரங்கத்தை கைவிட வலியுறுத்தி மதுரை, அ.வல்லாளப்பட்டி கிராமத்தில் போராடும் மக்களை, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று சந்தித்தார். அப்போது, கிராம மக்களிடம் அவர் பேசியதாவது;

"எந்த காரணத்திற்காகவும் டங்ஸ்டன் திட்டம் வராது. டெண்டர் விடுக்கும் வரை இங்கு சுரங்கரம் வரப்போவது யாருக்கும் தெரியாது. டங்ஸ்டன் சுரங்கம் வராது என மத்திய மந்திரி கிஷன் ரெட்டி விரைவில் சென்னைக்கு வந்து அறிவிக்க உள்ளார். பொங்கல் முடிந்த பின்னர், ரத்து தொடர்பான அறிவிப்பு வெளியாகும். டங்ஸ்டன் திட்டம் தொடர்பான போராட்டத்தை மக்கள் கைவிட வேண்டும். " இவ்வாறு அவர் கூறினார்.

 

Tags:    

மேலும் செய்திகள்