நாம் தமிழர் கட்சியை மாநில கட்சியாக அங்கீகரித்தது இந்திய தேர்தல் ஆணையம்

நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட்டது.;

Update:2025-01-10 21:42 IST

சென்னை,

கடந்த ஆண்டு நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க., மற்றும் அ.தி.மு.க. கட்சிகளுக்கு அடுத்தபடியாக பா.ஜ.க. மற்றும் நாம் தமிழர் கட்சிகள் முக்கியமான கட்சிகளாக விளங்கின. இதில் நாம் தமிழர் கட்சிக்கு பல தொகுதிகளில் அதிக வாக்குகள் கிடைத்தன.

நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி திருச்சி, கள்ளக்குறிச்சி, ஈரோடு, நாகப்பட்டினம் ஆகிய 4 தொகுதிகளில் 3-ம் இடத்தை பிடித்தது. மீதமுள்ள அனைத்து தொகுதிகளிலும் 4-ம் இடத்தை பிடித்தது. கடந்த தேர்தல்களில் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி இம்முறை மைக் சின்னத்தில் போட்டியிட்டு அதிகப்படியான வாக்குகளை பெற்றது. அதாவது, மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி 8.22 சதவீத வாக்குகளை பெற்றது.

மாநில கட்சியாக அங்கீகாரம் பெற 8 சதவீத வாக்குகள் தேவை என்ற நிலையில், தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி 8.22 வாக்குகளைப் பெற்றது. இந்த நிலையில், மக்களவை தேர்தலில் 8 சதவீதத்துகும் அதிகமான வாக்குகளை பெற்ற நாம் தமிழர் கட்சிக்கு மாநில கட்சி என்ற அங்கீகாரத்தை இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக வழங்கி உள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்