ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: திமுக, காங்கிரசில் யார் போட்டி - நாளை அறிவிப்பு?

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 5-ந்தேதி நடக்கிறது.;

Update:2025-01-10 21:17 IST

சென்னை,

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மரணம் அடைந்ததை தொடர்ந்து இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந்தேதி நடக்கிறது.

இதை முன்னிட்டு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. வருகிற 17-ந் தேதி கடைசி நாள் ஆகும். இன்று ஒரேநாளில் 3 சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.வருகிற 13-ந்தேதி மற்றும் 17-ந் தேதி ஆகிய நாட்கள் மட்டுமே வேட்புமனுக்களை வேட்பாளர்கள் தாக்கல் செய்ய முடியும். மற்ற நாட்கள் அரசு விடுமுறை நாட்கள் ஆகும். 18-ந் தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். வேட்புமனுவை திரும்ப பெற 20-ந் தேதி கடைசி நாளாகும்.

இந்த நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவது திமுகவா? அல்லது காங்கிரஸ் கட்சியா? என்பது குறித்து நாளை (சனிக்கிழமை) மாலை அறிவிக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுக கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி யார் போட்டியிடுவது என்பது குறித்து முடிவு செய்யப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்