பொங்கல் பண்டிகை: சென்னை - மதுரை இடையே முன்பதிவில்லா சிறப்பு ரெயில் இயக்கம்
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து நாளை காலை 10.45 மணிக்கு மதுரை புறப்படும்.;
சென்னை,
பொங்கல் பண்டிகை வருகிற செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில், பண்டிகையை கொண்டாட சென்னை உள்ளிட்ட வெளியூர்களில் பணிபுரியும் மக்கள், தங்களது சொந்த ஊர்களுக்கு இன்றில் இருந்தே படையெடுக்க தொடங்கி விட்டனர்.
சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் சிறப்பு பேருந்துகள் மற்றும் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில், சென்னையில் இருந்து நாளை மதுரைக்கு முன்பதிவில்லா சிறப்பு மெமு ரெயில் நாளைக்கு இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
முற்றிலும் முன்பதிவில்லாத பெட்டிகளை கொண்ட இந்த மெமு ரெயிலானது, சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து நாளை காலை 10.45 மணிக்கு புறப்பட்டு, மதுரைக்கு இரவு 7.15 மணிக்கு செல்லும். மறுமார்க்கமாக மதுரையில் இருந்து நாளை இரவு 8.30 மணிக்கு புறப்படும் ரெயிலானது, நாளை மறுநாள் அதிகாலை 4.40 சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் வந்தடையும்.
இந்த ரெயில், மேல்மருவத்தூர், திண்டிவனம், விருத்தாச்சலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், கொடை ரோடுஆகிய ரெயில் நிலையங்களிலும் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.