திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தில் சீமான் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகியுள்ள அதிமுக பிரமுகர் சுதாகரைக் குறிப்பிட்டு, 'இவர்தான் அந்த சார்' என்ற போஸ்டரை ஏந்திக்கொண்டு கோஷமிட்டபடியே சட்டப்பேரவைக்கு திமுக எம்.எல்.ஏ.க்கள். வந்ததால் பரபரப்பு நிலவியது.
பனையூரில் இன்று நடைபெறும் தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் விஜய் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
சட்டசபை 5-வது அலுவல் கூட்டம் தொடங்கியது. உள்ளாட்சி அதிகாரி குறித்த சட்டமசோதா தாக்கலாகிறது.
சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு ஏற்பட்டது. இதனையடுத்து மீண்டும் விமானம் திரும்பி சென்னைக்கு அவசரமாக தரையிறங்கியது. நடுவானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விமானியின் துரித நடவடிக்கையால் 159 பயணிகள் உயிர்தப்பினர். மற்றொரு விமானம் மூலம் சிங்கப்பூருக்கு பயணிகள் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர்.
யுஜிசி விதிமுறைகளை கண்டித்து திமுக மாணவரணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக மாணவரணி ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி ஜன.17 வரை நடைபெறுகிறது.
திபெத்தில் தொடரும் நிலநடுக்கம், ஒரே இரவில் 6 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பொங்கல் பரிசுத் தொகுப்பு அனைவரும் விரைந்து பெற்றிட ஏதுவாக தமிழ்நாட்டில் அனைத்து ரேஷன் கடைகளும் இன்று வழக்கம் போல் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம். இருமுடி கட்டிக்கொண்டு அய்யப்பனை தரிசிப்பதற்காக வெகு நீண்ட வரிசையில் காத்துக்கிடக்கின்றனர்.