இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 14-01-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;

Update:2025-01-14 09:12 IST


Live Updates
2025-01-14 08:26 GMT

ஜம்மு மற்றும் காஷ்மீரில் நடந்த 9-வது ஆயுத படைகளின் முன்னாள் வீரர்கள் தின நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார்.

அவர் பேசும்போது, காஷ்மீருக்கும், நாட்டின் மீதமுள்ள பகுதிகளுக்கும் இடையேயுள்ள இடைவெளியை இணைப்பதே எங்களுடைய அரசின் தலையாய முன்னுரிமையாகும் என கூறியுள்ளார்.

2025-01-14 07:59 GMT

வானிலை முன்னறிவிப்பின் துல்லிய தன்மை கடந்த 10 ஆண்டுகளில் 50 சதவீதம் அதிகரித்து உள்ளது என மத்திய புவி அறிவியல் துறையின் இணை மந்திரி ஜிதேந்திரா சிங் கூறியுள்ளார்.

2025-01-14 07:33 GMT

தூத்துக்குடியில் இருந்து தாம்பரத்துக்கு 19-ம்தேதி சிறப்பு ரெயில் இயக்கம்

பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்பும் பொதுமக்களின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காகவும் வருகிற 19-ம்தேதி தூத்துக்குடியில் இருந்து தாம்பரத்துக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

2025-01-14 07:22 GMT

டெல்லி முதல்-மந்திரி அதிஷி மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கு நேரில் சென்று தன்னுடைய வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்துள்ளார்.

2025-01-14 06:16 GMT

நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை மெய்ப்பிக்க நான் கடமைப்பட்டுள்ளேன் - நடிகர் அஜித்குமார்

துபாயில் நடந்த 24 மணி நேர கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமாரின் அணி 3-ம் இடம் பிடித்தது. இதையொட்டி அஜித்குமாருக்கு திரையுலகினரும், ரசிகர்களும் வாழ்த்துகளை கூறி வருகிறார்கள். இந்த நிலையில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள நடிகர் அஜித்குமார் பொங்கல் மற்றும் சங்கராந்தி வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார். 

2025-01-14 06:11 GMT

தமிழ்நாடு சமத்துவமும், ஜனநாயகமும் காக்கும் வாடிவாசல் - துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். சாதி, மதம் கடந்து அனைவராலும் கொண்டாடப்படுகிற இச்சமத்துவப் பெருவிழாவை போற்றுவோம். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் திட்டங்களால் உயர்ந்து நிற்கும் தமிழ்நாடு, இந்திய ஒன்றியத்தில் சமத்துவமும் - ஜனநாயகமும் காக்கும் வாடிவாசல் என்பதை உலகுக்கு உரக்கச் சொல்வோம் என்று அவர் கூறியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்