இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 14-01-2025

Update:2025-01-14 09:12 IST
Live Updates - Page 2
2025-01-14 05:39 GMT

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு; 14 பேர் காயம்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்கள் என மொத்தம் 14 பேர் காயம் அடைந்து உள்ளனர். இவர்களில் 7 மாடுபிடி வீரர்கள், 9 காளை உரிமையாளர்கள் மற்றும் பார்வையாளர் ஒருவர் என 14 பேருக்கு காயம் ஏற்பட்டு உள்ளது.

2025-01-14 05:30 GMT

தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.58,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.7,330-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து, ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

2025-01-14 04:58 GMT

உத்தர பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி நேற்று சிறப்பாக தொடங்கியது. பிப்ரவரி 26-ந்தேதி வரையிலான 45 நாட்கள் இந்த மகா கும்பமேளா நிகழ்ச்சி நடைபெறும்.

உத்தர பிரதேசத்தில் நடந்து வரும் மகா கும்பமேளாவின் 2-ம் நாளான இன்றும் பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். இந்த கும்பமேளாவில் கலந்து கொள்வதற்காக, வெளிநாடுகளை சேர்ந்த பக்தர்களும் வருகை தந்துள்ளனர்.

அவர்கள், மக்களோடு மக்களாக சேர்ந்து கும்பமேளாவில் பங்கேற்றும் பல்வேறு கொண்டாட்டங்களில் ஈடுபட்டும் வருகின்றனர். இதேபோன்று துறவிகளுடன் சேர்ந்து வெளிநாட்டு பக்தர்கள் சாமி பாடல்களை பாடி, புனித நீராடி வருகின்றனர்.

2025-01-14 04:20 GMT

பொங்கல் திருவிழா இறக்குமதி செய்யப்பட்டதன்று... பச்சைத் தமிழ் விழா - வைரமுத்து வாழ்த்து

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கவிஞரும், பாடலாசிரியருமான வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். பொங்கல் திருவிழா இறக்குமதி செய்யப்பட்டதன்று. பச்சைத் தமிழ் நாட்டின், பச்சைத் தமிழ் விழா என்று அவர் தெரிவித்துள்ளார்.

2025-01-14 03:59 GMT

கர்நாடகா மந்திரி சென்ற கார் மரத்தில் மோதி விபத்து

கர்நாடகாவில் மந்திரி லட்சுமி ஹெப்பல்கார் சென்ற கார் இன்று காலை 6 மணியளவில் பெலகாவி அருகே மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டு உள்ளது. இதில், லேசான காயங்களுடன் அவர் தப்பினார்.

2025-01-14 03:47 GMT

புதுச்சேரி பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை

புதுச்சேரியில் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் ஆண் நண்பருடன் இருந்த மாணவி ஒருவருக்கு 3 பேர் கொண்ட கும்பல் ஒன்று பாலியல் தொல்லை அளித்துள்ளது.

அந்த 3 பேரில் ஒருவர் பல்கலைக்கழகத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருபவர் என கூறப்படுகிறது. இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

2025-01-14 03:46 GMT

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. இதில், மதுரை அவனியாபுரத்தில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு இன்று தொடங்கி நடந்து வருகிறது. பல சுற்றுகளாக நடைபெறும் இந்த ஜல்லிக்கட்டில் வெற்றி பெறும் காளைகள் மற்றும் வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன.

வாடிவாசலில் இருந்து 1,100 காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்படுகின்றன. வீரர்களும் உற்சாகத்துடன் காளைகளை பிடித்து வருகின்றனர். ஒவ்வொரு காளை அவிழ்த்து விடும்போதும் 2 சக்கர வாகனம், தங்க காசு, வெள்ளி காசு, ரொக்க பணம், கட்டில், குக்கர், வேட்டி, அண்டா போன்ற பாத்திரங்கள் உள்ளிட்ட பரிசு பொருட்கள் அறிவிக்கப்படுகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்