பொள்ளாச்சியில் சர்வதேச வெப்பக் காற்று பலூன் திருவிழா கோலாகலம்

சர்வதேச வெப்பக் காற்று பலூன் திருவிழா பொள்ளாச்சியில் நடைபெறுகிறது.;

Update:2025-01-14 19:18 IST
பொள்ளாச்சியில் சர்வதேச வெப்பக் காற்று பலூன் திருவிழா கோலாகலம்

கோவை,

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் சர்வதேச வெப்பக் காற்று பலூன் திருவிழா இன்று கோலாகலமாக தொடங்கியது. இந்த பலூன் திருவிழா வரும் 16-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்த பலூன்களில் பறந்தவாறு சுற்றுலா பயணிகள் பொள்ளாச்சியின் இயற்கை அழகை கண்டு ரசிக்கலாம்.

இந்த பலூன் திருவிழாவில் தமிழ்நாடு மட்டுமல்லாது பிரேசில், இங்கிலாந்து, ஆஸ்திரியா, வியட்நாம், தாய்லாந்து, பிரான்ஸ், பெல்ஜியம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த வண்ணமயமான வெப்பக் காற்று பலூன்கள் வானை அலங்கரித்தன. 

Full View
Tags:    

மேலும் செய்திகள்