சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை
கடந்த சில நாட்களாக பல பகுதிகளில் கனமழை பெய்து வரும் சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
செய்முறை தேர்வு அட்டவணை வெளியீடு
பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. பிப்ரவரி 7-ம் தேதி முதல் 14-ம் தேதிக்குள் பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும். பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 15-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை நடைபெறும் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது அடக்குமுறையை அரசு கையாள்கிறது. அண்ணா பல்கலை. விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும். பெண்கள் தமிழக அரசின் மீது நம்பிக்கை இழந்து வருவதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
பக்தர்களை தவறாக வழிநடத்தும் வகையிலும், அவர்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையிலும் தவறான செய்திகளைப் பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகல்
நாம் தமிழர் கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் சுப்பையா பாண்டியன் தனது ஆதரவாளர்களுடன் கட்சியில் இருந்து விலகி உள்ளார். நாங்கள் விலகுவதற்கு முக்கிய காரணமே சாட்டை துரைமுருகன் மட்டும்தான். சீமான் படிப்பாளி. மிகப்பெரிய அறிவாளி, ஆனால் மிகவும் மோசமான நிர்வாகி என சுப்பையா பாண்டியன் கூறியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே தனியாருக்கு சொந்தமான எண்ணெய் ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மூனாண்டிபட்டியில் உள்ள ஆலையில் எண்ணெய் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
திருப்பதியில் மாஸ்க் கட்டாயம்
எச்.எம்.பி.வி தொற்று பரவி வருவதால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கட்டாயம் மாஸ்க் அணிந்து வர வேண்டும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
டெஸ்ட் பவுலர்களுக்கான ஐசிசி தரவரிசையில் 29 இடங்கள் முன்னேறி 10-வது இடத்தை பிடித்தார் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஸ்காட் போலண்ட்.
அதிமுகவினர் மீதான நடவடிக்கை ரத்து
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று அதிமுக உறுப்பினர்கள் மீதான நடவடிக்கை திரும்பப் பெறப்படுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
கவர்னரின் செயலை சட்டப்பேரவை கண்டிக்கிறது - சபாநாயகர் அப்பாவு
கவர்னர் ஆர்.என்.ரவி எக்ஸ் தளத்தில் பதிவிட்டது மக்கள், பேரவை உறுப்பினர்களை அவமானப்படுத்தும் செயல். கவர்னரின் இந்த செயலை தமிழ்நாடு சட்டப்பேரவை வன்மையாக கண்டிக்கிறது. தேசிய கீதத்தை முதலில் பாட வேண்டும் என கோரிக்கை வைக்க கவர்னருக்கு உரிமையில்லை என சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.