இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 08-01-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;

Update:2025-01-08 09:21 IST


Live Updates
2025-01-08 14:53 GMT

விழுப்புரத்தில் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து சிறுமி இறந்த வழக்கில் கைது செய்யப்பட்ட எமில்டா, டோம்னிக் மேரி, ஏஞ்சல் ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த விழுப்புரம் முதன்மை அமர்வு கோர்ட் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

2025-01-08 14:19 GMT

நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் வரும் 10ம் தேதி நியூயார்க் நீதிமன்றம் தண்டனை அறிவிக்க உள்ள நிலையில், ஜனாதிபதியாக பொறுப்பேற்க இருக்கும் டொனால்ட் டிரம்ப், இவ்வழக்கில் தண்டனையை நிறுத்தி வைக்க அந்நாட்டின் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

2025-01-08 14:07 GMT

மும்பையில் போவாயில் உள்ள ஹிரானந்தனி மருத்துவமனையில் 6 மாத குழந்தைக்கு எச்.எம்.பி.வி (HMPV) வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

2025-01-08 13:36 GMT

டெல்லி சட்டசபை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) தனித்து போட்டியிடும் என்றும், சிறப்பாகச் செயல்படும் என்றும் அக்கட்சியின் தலைவர் மாயாவதி கூறியுள்ளார்.

2025-01-08 13:08 GMT

திருப்போரூர் முருகன் கோவிலின் உண்டியலில் விழுந்த ஐபோன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. உண்டியலில் விழுந்த ஐபோன் அறநிலையத்துறை விதிகளின்படி ஏலம் விடப்பட்டது. உரிமையாளர் தினேஷ் ரூ.10 ஆயிரத்திற்கு ஏலம் எடுத்தார்.

2025-01-08 13:06 GMT

நேற்று கார் ரேஸ் பயிற்சியின்போது ஏற்பட்ட விபத்தில் அஜித் காயங்கள் இன்றி தப்பிய நிலையில் இன்று ஒன்றரை மணி நேரம் பயிற்சி செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

2025-01-08 12:29 GMT

ரஷியாவின் எரிபொருள் சேமிப்பு கிடங்கை தாக்கிய உக்ரைன்

ரஷியாவின் சரடோப் பிராந்தியத்தில் உள்ள எரிபொருள் சேமிப்பு கிடங்கு மீது தாக்குதல் நடத்தியதாகவும்,  சேமிப்பு கிடங்கு பற்றி எரிவதாகவும் உக்ரைன் ராணுவம் கூறி உள்ளது. அந்த சேமிப்பு கிடங்கில் இருந்து விமான தளத்திற்கு எரிபொருள் சப்ளை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

2025-01-08 11:59 GMT

இஸ்ரோ தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள வி.நாராயணனுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். விண்வெளி துறையின் முக்கிய பொறுப்பில் நாராயணன் நியமிக்கப்பட்டது மாநிலத்திற்கு பெருமை. நாராயணன் தலைமையில் விண்வெளி ஆராய்ச்சியில் நாடு பல உச்சங்களை தொட வாழ்த்துகள் என அவர் கூறியுள்ளார்.

2025-01-08 11:54 GMT

சென்னை பெருநகர காவல் ஆணையருக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் பாஜக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழக கவர்னருக்கு எதிராக ஆளுங்கட்சியினர் போராட்டம் நடத்த அனுமதித்து விதிமீறலில் ஈடுபட்டதாகவும், அரசியலமைப்பு சட்டத்தை மீறும் வகையில் காவல் ஆணையர் ஒருதலைபட்சமாக செயல்பட்டதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

2025-01-08 11:47 GMT

விசாகப்பட்டினம்: வாகன பேரணியில் பங்கேற்ற மோடி

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற வாகன பேரணியில் மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு மற்றும் துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் ஆகியோருடன் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்