இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-12-2024

Update: 2024-12-16 03:41 GMT
Live Updates - Page 4
2024-12-16 05:19 GMT


சென்னை திரும்பும் உலக செஸ் சாம்பியன் குகேஷை வரவேற்க விமான நிலையத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் பிரமாண்ட ஏற்பாடு

விமான நிலையத்தில் இருந்து வீட்டுக்கு அவரை அழைத்துச் செல்ல அரசு சார்பில் வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

2024-12-16 05:15 GMT




 

இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்கவுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் அணிவகுப்பு மரியாதை!

2024-12-16 05:11 GMT

தூத்துக்குடி: ஏரல் தரைப்பாலம் வெள்ளத்தால் சேதம்.. 4-வது நாளாக போக்குவரத்துக்கு தடை

2024-12-16 05:05 GMT

இன்றைய தங்கம் விலை நிலவரம்...?

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.57,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.7,140-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

2024-12-16 04:06 GMT

பிரிஸ்பேன் டெஸ்ட்: இந்தியா திணறல்

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது. இதில் 3-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் 445 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கியுள்ள இந்திய அணி, 3 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.

 

Tags:    

மேலும் செய்திகள்