இன்றைய செய்திகள் சில வரிகளில்..

Update:2024-12-10 09:08 IST
Live Updates - Page 3
2024-12-10 03:42 GMT

நாகர்கோவில் - நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் விசுவாசபுரம் அருகே அடுத்தடுத்து 4 லாரிகள் மோதி விபத்து - 2 ஓட்டுநர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி

முன்னால் சென்ற லாரியை முந்த முயன்றபோது பின்னால் வந்த லாரி மோதியுள்ளது. அதனைத் தொடர்ந்து வந்த 2 லாரிகளும் அடுத்தடுத்து மோதியுள்ளன.

2024-12-10 03:41 GMT

திருவண்ணாமலை தீப மலையில் மண் சரிவு ஏற்பட்டு 7 பேர் உயிரிழந்த இடத்தில் மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் பொதுமக்களிடம் குறைகளை கேட்டு வருகின்றனர்.

2024-12-10 03:38 GMT

சென்னை சைதாப்பேட்டை நீதிமன்ற வழக்கறிஞர் மதன் என்பவரை மர்ம கும்பல் வெட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இரு தரப்புக்குள் போதையில் நடந்த சண்டையில் வெட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. வழக்கறிஞர் மதனை வெட்டி விட்டு தப்பியோடிய கும்பலை கோட்டூர்புரம் போலீசார் தேடி வருகிறார்கள். படுகாயம் அடைந்த வழக்கறிஞர் மதன், சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்