திருவண்ணாமலை: மலை உச்சியில் இன்று மகா தீபம்

இன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரமுள்ள கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் தீபம் ஏற்றப்படுகிறது.;

Update:2024-12-13 05:58 IST

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இவ்விழாவின் 10-ம் நாள் விழாவான இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். இன்று மாலை 6 மணிக்கு கோவிலுக்கு பின்புறம் உள்ள 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. 

மகா தீபத்தை தரிசனம் செய்வதற்கு 40 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிளது. இதையொட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. 14 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். முன்னதாக கோவிலில் மகா தீபத்தையொட்டி வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்