தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: தவறுக்கு மன்னிப்பு கேட்கிறோம்- டிடி தமிழ் தொலைக்காட்சி

அசாதாரண சூழலை ஏற்படுத்தியதற்காக கவர்னரிடம் மன்னிப்பு கேட்டு கேட்டுக்கொள்கிறோம் என்று டிடி தமிழ் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

Update: 2024-10-18 13:33 GMT

சென்னை,

சென்னையில் உள்ள துர்தர்ஷன் (டிடி) தமிழ் தொலைக்காட்சியில் இன்று இந்தி தின விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் துவக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இதில், "தெக்கனமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்" என்ற வரி இடம் பெறவில்லை. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக தனது கண்டனத்தை பதிவு செய்து இருந்தார். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும் கண்டனம் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்தில் ஏற்பட்ட குளறுபடிக்கு மன்னிப்பு கேட்பதாக டிடி தமிழ் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக டிடி தமிழ் தொலைக்காட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- தமிழ்த்தாய் வாழ்த்து குளறுபடி விவகாரத்தில் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிக்க வேண்டும் என்ற எந்த நோக்கமும் இல்லை. அசாதாரண சூழலை ஏற்படுத்தியதற்காக கவர்னரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்" இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்