செங்கல்பட்டு: மதுபான கடையை முற்றுகையிட்டு பெண்கள் தர்ணா போராட்டம்

மதுபான கடையை வேறு இடத்துக்கு மாற்ற வலியுறுத்தி பெண்கள் போராட்டம் நடத்தினர்.;

Update:2024-11-24 18:21 IST

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த கீழ் மருவத்தூர் பகுதியில் அரசு மதுபான கடை இயங்கி வருகிறது. கீழ்மருவத்தூர் பகுதியில் உள்ள விவசாய பொதுமக்கள் அவருடைய விவசாய விளை நிலங்களுக்கு செல்ல வேண்டும் என்றால் அரசு மதுபான கடையை கடந்து தான் செல்ல வேண்டும். தொடர்ந்து அரசு மதுபான கடையில் மது வாங்கும் மது பிரியர்கள் சாலையிலே அமர்ந்து மது அருந்துவதால் அவ்வழியாக பெண்கள் செல்ல முடியாமல் அவல நிலை உருவாகியுள்ளது.

இதனால் பலமுறை துறைகள் சார்ந்த அதிகாரியிடம் மனு அளித்தும் எந்த பயனும் இல்லை எனக் கூறி கீழ்மருவத்தூர் பகுதி சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் இன்று அரசு மதுபான கடையை முற்றுகையிட்டு கடை முன்பு அமர்ந்து போராட்டம் செய்தனர். அங்கு வந்த காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்பொழுது காவல்துறைக்கும் போராட்டம் செய்த பெண்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

போராட்டம் செய்த பெண்கள் தங்களுடைய குடும்பத்தில் உள்ள ஆண்கள் வேலைக்கு செல்லாமல் தினசரி காலிலிருந்து இரவு வரை குடித்துவிட்டு டாஸ்மாக் கடை அருகே விழுந்து கிடக்கின்றனர். அவர்களை பிள்ளைகளின் மூலம் வீட்டிற்கு அழைத்து செல்கின்ற அவல நிலை இருக்கின்றது. அது மட்டுமல்லாமல் 15 வயதில் இருந்து 20 வயது முடியாத சிறுவர்கள் கூட கீழ் மருவத்தூர் ஏரிக்கரை விவசாய நிலங்களில் அருகே கூட்டம் கூட்டமாக மது அருந்துகின்றனர். இதனால் பள்ளிக்குச் செல்லும் மாணவிகள் வயதுக்கு வந்த இளம் பெண்கள் வெளியே செல்ல முடியாமல் பயந்து அச்சப்பட்டு வீட்டிலேயே முடங்கி விடுகின்றனர்.

எனவே அரசு மதுபான கடை சார்ந்த துறை சார்ந்த அதிகாரிகள் நேரடியாக எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கடையை இங்கிருந்து வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் இந்த என ஒற்றைக் கோரிக்கையாக முன்வைத்து பெண்கள் மூன்று மணி நேரமாக மதுபான கடை எதிரே அமர்ந்துகொண்டு போராட்டம் செய்து வருகின்றனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்