நீட் தேர்வு கல்வி கட்டமைப்பை அழிக்கக்கூடியது: அப்பாவு
நீட் தேர்வு கல்வி கட்டமைப்பை அழிக்கக்கூடியது என தமிழ்நாடு சட்டசபை தலைவர் அப்பாவு தெரிவித்தார்.;
சென்னை,
சென்னை எழும்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கலந்து கொண்டார். பின்னர், அப்பாவு நிருபர்களிடம் கூறியதாவது:-
வயநாடு தேர்தலில் பிரியங்கா காந்தி வெற்றிபெற்றுள்ளது மகிழ்ச்சியை தருகிறது. மத்திய அரசு நீட் தேர்வுக்கு ஒரு சட்டத்தை கொண்டுவந்துள்ளது. நீட் தேர்வு தேவையில்லை என்பது தான் அனைவருடைய கருத்துமாக இருக்கிறது.
நீட் தேர்வு கல்வி கட்டமைப்பை அழிக்கக்கூடியது. நீட் தேர்வு தமிழ்நாட்டுக்கு தேவையற்றது. பல லட்சம் கட்டணமாக கொடுத்து நீட் பயிற்சி மையத்துக்கு செல்கிறார்கள். அந்த வசதி இல்லாத ஏழை பிள்ளைகள் பாதிக்கப்படுகிறார்கள்.மத்திய அரசின் நீட் தொடர்பான சட்டம் கல்விக்கும், சாதாரண மக்களுக்கும் எதிரானது" இவ்வாறு அவர் கூறினார்.