2026-ம் ஆண்டு தமிழகத்தில் கூட்டணி ஆட்சி- கிருஷ்ணசாமி
2026-ம் ஆண்டு தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு அரிய தருணம். அதற்கான அஸ்திரத்தை விஜய் ஏற்கனவே தொடுத்துள்ளார் என்று கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.;
சென்னை
புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மராட்டியத்தில் பா.ஜனதா கூட்டணி பெரும் வெற்றியை பெற்றுள்ளது. இது பிற மாநிலங்களுக்கும் முன்னுதாரணமாக அமையும். தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கும் இது பொருந்தும். எனவே, 2026-ம் ஆண்டு தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு அரிய தருணம். அதற்கான அஸ்திரத்தை விஜய் ஏற்கனவே தொடுத்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வாக, ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற முழக்கத்துடன் தமிழக அரசியல் கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும். இதுவே மராட்டியத் தேர்தல் முடிவுகள் சொல்லும் பாடமாகும்"இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.