தமிழக கவர்னர் ஆர்.என். ரவி டெல்லி பயணம்
தமிழக கவர்னர் ஆர்.என். ரவி இன்று காலை திடீரென டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.;

சென்னை,
தமிழக கவர்னர் ஆர்.என். ரவி மூன்று நாட்கள் பயணமாக இன்று காலையில் டெல்லி விரைந்தார். கவர்னரின் பயணத்தின் பின்னணியில் அரசியல் இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றது. அமைச்சர்கள் சிலருக்கு குறி வைக்கப்பட்டிருப்பதால், அவர்கள் சார்ந்த துறைகள் குறித்து கவர்னரிடம் ஆலோசிக்க டெல்லியில் திட்டமிடப்பட்டு உள்ளது என கூறப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி ஊழல் குற்றச்சாட்டு, அதனை தொடர்ந்து பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முற்றுகை போராட்டம், சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி என அடுத்தடுத்து தமிழக அரசியலில் ஏற்பட்டு உள்ள பரபரப்பான சூழலில் கவர்னருடைய இந்த பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. 3 நாட்கள் பயணம் முடிந்ததும், வருகிற 28-ந்தேதி இரவு கவர்னர் ரவி சென்னைக்கு திரும்புகிறார்.