வேலூர்: பைக் மீது லாரி மோதி விபத்து - கல்லூரி மாணவர் பலி

வேலூர் அருகே லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.;

Update:2025-03-20 20:46 IST
வேலூர்: பைக் மீது லாரி மோதி விபத்து - கல்லூரி மாணவர் பலி

வேலூர் காட்பாடியை சேர்ந்தவர் நகீம். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். இந்த நிலையில் அவர் தனது பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது. எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த லாரி ஒன்று பைக் மீது மோதியது.

இந்த கோர விபத்தில் நகீம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இந்த விபத்தில் படுகாயமடைந்த மற்றொரு நபர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைகாக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த சத்துவாச்சாரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்