புயல் எச்சரிக்கை: மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் அமைச்சர் ஆய்வு

மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் இன்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆய்வு செய்தார்.;

Update:2024-11-29 17:59 IST

சென்னை,

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று பெஞ்சல் புயலாக வலுப்பெற்றுள்ள நிலையில், தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதிகனமழை வரை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது .

இந்த நிலையில், வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையை தொடர்ந்து , மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை, சேப்பாக்கம், எழிலகத்தில் அமைந்துள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் இன்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆய்வு செய்தார். ஆய்வின் போது கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிருவாக ஆணையர் ராஜேஷ் லக்கானி, பேரிடர் மேலாண்மைத் துறை இயக்குநர் வ. மோகனச்சந்திரன்,மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்