மழை பாதிப்புகளை தி.மு.க. நிர்வாகிகள் கண்காணிக்க வேண்டும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
நிவாரணப் பணிகளில் அரசு எந்திரத்துக்குத் துணை நிற்குமாறு திமுக நிர்வாகிகளிடம் முதல்-அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை நிலையமான அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள 'War Room'-ஐ முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். அப்போது, மழை பாதிப்புகளை தி.மு.க. நிர்வாகிகள் கண்காணிக்க வேண்டும் எனவும், பொதுமக்களுக்கு உதவிடுமாறும் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் தெரிவிக்கையில்,
"திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை நிலையமான அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள 'War Room'-ஐப் பார்வையிட்டு, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட - பகுதி - வட்டச் செயலாளர்கள், கவுன்சிலர்கள் ஆகியோரைத் தொடர்புகொண்டு, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை முகாம்களுக்கு அழைத்துச் செல்வதோடு, அவர்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளைச் செய்துகொடுத்து, நிவாரணப் பணிகளில் அரசு எந்திரத்துக்குத் துணை நிற்குமாறு கேட்டுக் கொண்டேன்.
இரவு முழுதும் விழிப்புடன் பணியாற்றி, கோரிக்கைகளை ஒருங்கிணைத்து, பொதுமக்களுக்கு உதவிடுமாறு கழக நிர்வாகிகளை அறிவுறுத்தியுள்ளேன். அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள War Room எண்: 08069446900"
இவ்வாறு தெரிவித்துள்ளார்.