அரசியல் ரீதியான விவாதம் நடைபெறவில்லை - ரஜினிகாந்துடன் சந்திப்பு குறித்து ஓ.பன்னீர்செல்வம்

நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம் இன்று நேரில் சந்தித்தார்.;

Update: 2025-01-01 14:12 GMT

சென்னை,

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்துப் பேசியதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.  

சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றதாகவும், புத்தாண்டு வாழ்த்து தெரிவிப்பதற்காக இந்த சந்திப்பு நிகழ்ந்ததாகவும் தகவல் வெளியாகி இருந்தது. 

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், "புத்தாண்டையொட்டி மரியாதை நிமித்தமாக நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தேன். அரசியல் ரீதியான விவாதம் நடைபெறவில்லை என்பதைத் தெளிவாக சொல்லிக்கொள்கிறேன்" என்று அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்