நம்மை சூழ்ந்துள்ள இருள் விலகட்டும்: எல்.முருகன் பொங்கல் வாழ்த்து

நம்மை சூழ்ந்துள்ள இருள் விலகட்டும் என்று எல்.முருகன் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.;

Update:2025-01-14 09:47 IST

சென்னை,

பொங்கல் பண்டிகையையொட்டி மத்திய இணை மந்திரி எல்.முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-

"தைத் திங்கள் பிறக்கட்டும், நம்மை சூழ்ந்துள்ள இருள் விலகட்டும்!"

தமிழகத்தை சூழ்ந்துள்ள தீய அரசியல் சக்தியை வீழ்த்தி, தேசியத்தின் பாதையில் தமிழக மக்கள் அணிவகுத்து நிற்பார்கள். மிக விரைவில் நல்லதொரு விடிவு காலம் பிறந்து, தமிழகம் இழந்த பெருமைகள் அனைத்தையும் மீட்டெடுப்பதற்கான உத்வேகத்தை, பொங்கல் திருநாள் நமக்கு அளிக்கட்டும். அனைவரது துயரங்களும் தீர்ந்து, வாழ்வின் சகலவிதமான நலமும் வளமும் பெற்று மகிழ்வோடு வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.

தமிழர்களின் வாழ்வியலோடு கலந்த ஒரு இனிய நாளாகவும், தமிழர்களுக்கே உரிய திருநாளாகவும், உழவர்கள் கொண்டாடும் பெருநாளாகவும் திகழும் பொங்கல் பண்டிகையில், உலகெங்கும் வாழும் அனைத்து தமிழ் சொந்தங்களுக்கும் எனது இதயம் கனிந்த தைப்பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்