தமிழக எல்லைக்குள் நாய்களை விட்ட கேரள வாலிபர்- ரூ.2 லட்சம் அபராதம்
தமிழக எல்லைக்குள் 20க்கும் மேற்பட்ட தெரு நாய்களை விட முயற்சித்தவருக்கு ரூ. 2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.;

கேரள எல்லை பகுதியில் இருந்து சந்தேகத்திற்டமான வாகனம் ஒன்று கன்னியாகுமரி மாவட்டம் அருகே வந்து கொண்டிருந்தது. இந்த வாகனத்தில் 20க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் அடைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இந்த வாகனத்தில் இருந்த நாய்களை வாகன ஓட்டுநர் தமிழக எல்லையான திருவனந்தபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் விட முயற்சித்தார். அப்போது இதனை கண்ட அங்குள்ள பொது மக்கள் அந்த வாகனத்தை விரட்டி பிடித்தனர். பின்னர் அதே வாகனத்தில் மீண்டும் நாய்களை ஏற்ற வைத்தனர்.
இது குறித்து தகவலறிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த நபருக்கு ரூ. 2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.