கார்த்திகை மகாதீபம்; தாம்பரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரெயில்கள் அறிவிப்பு

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் போது பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க தெற்கு ரெயில்வே சார்பாக மெமு சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.

Update: 2024-12-11 15:54 GMT

சென்னை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெற்று வரும் கார்த்திகை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் ஏற்றப்படும் நிகழ்ச்சி வருகிற 13-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. இந்த விழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவதால் தெற்கு ரெயில்வே சார்பில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் போது பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்க ரெயில் எண் 06115/06116 தாம்பரம் - திருவண்ணாமலை - தாம்பரம் முன்பதிவு செய்யப்படாத மெமு சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.

ரெயில் எண். 06115:

தாம்பரம் திருவண்ணாமலை முன்பதிவு செய்யப்படாத மெமு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் தாம்பரத்தில் இருந்து 13, 14, 15 டிசம்பர், 2024 வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தேதிகளில் இரவு 10.45 மணிக்குப் புறப்பட்டு, 14.45 மணிக்கு திருவண்ணாமலையை சென்றடையும்,

ரெயில் எண். 06116:

திருவண்ணாமலை தாம்பரம் முன்பதிவு செய்யப்படாத மெமு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் திருவண்ணாமலையில் இருந்து 13, 14, 15 டிசம்பர், 2024 வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தேதிகளில் 22.25 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் மதியம் 02.15 மணிக்கு தாம்பரம் சென்றடையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

 

Tags:    

மேலும் செய்திகள்