பொங்கல் கொண்டாட்டத்தில் கைகலப்பு: ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்ட மாணவர்கள்
பொங்கல் விழா கொண்டாட்டத்தின் போது அங்கு சில மாணவர்கள் மது அருந்திவிட்டு வந்ததாக கூறப்படுகிறது.;
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த திருச்சிற்றம்பலம் பகுதியில் அமைந்துள்ளது அரசினர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இங்கு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து இருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு கல்லூரி வளாகத்தில் பொங்கல் விழா கொண்டாட்டம் கல்லூரி மாணவர்களால் நடத்தப்பட்டது. அப்போது பொங்கல் விழா கொண்டாட்டத்தின் போது அங்கு சில மாணவர்கள் மது அருந்திவிட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து மது அருந்திய மாணவர்களுக்கும் மற்ற தரப்பு மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் கட்டை மற்றும் கல் போன்ற ஆயுதங்களால் சாலையில் தாக்கி கொண்டனர்.இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பட்டது. இது குறித்து ஆர் .ஒன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.