அரையாண்டு விடுமுறை முடிந்தது.. நாளை திட்டமிட்டபடி பள்ளிகள் திறப்பு
விடுமுறை நீட்டிப்பு என சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரவிய நிலையில் பள்ளி கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.;
சென்னை,
தமிழ்நாடு மாநில கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில், 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று வரும் மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகள் நடைபெற்றது. இந்த தேர்வு நிறைவுபெற்றதை தொடர்ந்து, இன்று (1 ஜனவரி 2025) வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இதனிடையே பள்ளிகள் திறப்பு நாளைக்கு பதிலாக, விடுமுறை நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்நிலையில் நாளை திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு பள்ளி கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அரையாண்டு விடுமுறை நீடிப்பு செய்யப்படலாம் என தகவல் பரவுகிறது. இது உண்மைக்கு புறம்பானது. நாளை (2.01.2025) திட்டமிட்டபடி தமிழ்நாடு மாநில / மத்திய கல்வி வாரியத்தின் கீழ் செயல்படும் பள்ளிகள், அரையாண்டு விடுமுறை முடிந்து திறக்கப்படும். திறக்கப்படும் தேதியில் எந்த விதமான மாற்றமும் இல்லை என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.