கொடிநாள் நிதி வசூல்: தமிழ்நாடு முதலிடம்

கொடிநாள் நிதி வசூலில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.

Update: 2024-12-27 14:14 GMT

சென்னை,

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7-ந்தேதி கொடிநாளாக அனுசரிக்கப்படுகிறது. கொடிநாளில் திரட்டப்படும் நிதி, முன்னாள் ராணுவ வீரர்களுக்கான நலத்திட்டங்களுக்கு செலவிடப்படுகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டு கொடிநாள் நிதி வசூலில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் இருந்து மட்டும் அதிகபட்சமாக ரூ.67.54 கோடி கொடிநாள் நிதியாக வசூல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிதியில் சென்னையில் இருந்து அதிகபட்சமாக ரூ.7.7 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. அதே போல் திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.6.6 கோடியும், திருச்சி மாவட்டத்தில் ரூ.4.5 கோடியும் வசூல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Full View
Tags:    

மேலும் செய்திகள்