மாமல்லபுரம் அருகே கார் மோதி 5 பெண்கள் பலி
மாமல்லபுரம் அருகே கார் மோதி 5 பெண்கள் உயிரிழந்தனர்.;
செங்கல்பட்டு,
சென்னை அருகே செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே பண்டிதமேடு பகுதி உள்ளது. ஈ.சி.ஆர் சாலை அருகே இப்பகுதி அமைந்துள்ளது.
இந்நிலையில், ஈ.சி.ஆர். சாலையில் பண்டிதமேடு பகுதியில் இன்று மதியம் 5 பெண்கள் மாடு மேய்த்துக்கொண்டிருந்தனர். அப்போது, ஈ.சி.ஆர். சாலையில் அதிவேகமாக வந்த கார், சாலையோரம் அமர்ந்து மாடு மேய்த்துக்கொண்டிருந்த பெண்கள் மீது மோதியது.
இந்த கோர விபத்தில் 5 பெண்களும் தூக்கி வீசப்பட்டனர். இச்சம்பவத்தில் சம்பவ இடத்திலேயே 5 பெண்களும் உயிரிழந்தனர்.
விபத்தை ஏற்படுத்திய காரை சுற்றி வளைத்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் காரில் இருந்த நபர்களை பிடித்து சரமாரியாக தாக்கினர். இது குறித்து தகவலறிந்த திருப்போரூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காரில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.