செங்கல்பட்டு: தேசிய நெடுஞ்சாலையில் ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்து - 6 பேர் காயம்

செங்கல்பட்டில் தேசிய நெடுஞ்சாலையில் ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 6 பேர் காயமடைந்தனர்.

Update: 2024-12-27 03:41 GMT

செங்கல்பட்டு,

திருப்பூரில் இருந்து நோயாளியை ஏற்றிக்கொண்டு தனியார் ஆம்புலன்ஸ் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த ஆம்புலன்சில் நோயாளி உள்பட 6 பேர் பயணித்தனர்.

இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஆம்புலன்ஸ் இன்று காலை வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஆம்புலன்சில் பயணித்த நோயாளி உள்பட 6 பேர் காயமடைந்தனர். இதையடுத்து, காயமடைந்த 6 பேரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் சென்னை மார்க்கத்தில் போக்குவரத்து சற்று பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்