நாமக்கல்: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிபோல் நடித்து வியாபாரியிடம் பணம் பறிப்பு - போலீஸ் விசாரணை

உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிபோல் நடித்து வியாபாரியிடம் பணம் பறித்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2024-12-27 16:15 GMT

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பட்டணம் பகுதியில் உள்ள பல்வேறு கடைகளுக்கு செந்தில்குமார் என்ற நபர் சென்றுள்ளார். அவர் தன்னை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, கடைகளில் குட்கா உள்ளிட்ட பொருட்கள் உள்ளதா என சோதனை செய்துள்ளார். அப்போது அங்குள்ள ஒரு வியாபாரியின் கடையை சீல் வைக்கப்போவதாக கூறி 30 ஆயிரம் ரூபாய் கேட்டு பேரம் பேசியுள்ளார்.

பின்னர், 10 ஆயிரம் ரூபாயை பெற்றுக் கொண்டு, தான் கொண்டு வந்த பொருட்களை வைத்து போட்டோ எடுத்துக்கொண்டும், பொருட்களை எடுத்துக்கொண்டும் சென்றதாக கடை உரிமையாளர் வேதனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி அருணிடம் கேட்டதற்கு, அவ்வாறு யாரும் சோதனை மேற்கொள்ளவில்லை என்று கூறியுள்ளார். உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிபோல் நடித்து வியாபாரியிடம் பணம் பறித்த நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Full View
Tags:    

மேலும் செய்திகள்