பொங்கல் பரிசுத் தொகுப்பு
பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் ஜனவரி 3-ம் தேதி முதல் வினியோகம் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
3-ம் தேதி மதுரையில் இருந்து சென்னைக்கு நீதி பேரணி - அண்ணாமலை அறிவிப்பு
அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக ஜனவரி 3-ம் தேதி மதுரையில் இருந்து சென்னைக்கு மகளிர் அணியினர் பங்கேற்கும் நீதிப் பேரணி நடைபெறும் என்று பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
ரஷியா மீது நேற்று இரவு 68 டிரோன்களை உக்ரைன் ஏவியது. அந்த டிரோன்கள் அனைத்தும் சுட்டு வீழ்த்தப்பட்டன.
ஏமன் மீது அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளன. இந்த தாக்குதலில் ஏற்பட்ட பாதிப்பு குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை,
திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிய்ட்ட 7 அறிவிப்புகள்:-
* குமரியில் திருவள்ளுவர் சிலைக்கு செல்ல 3 புதிய படகுகள் வாங்கப்படும்.
* ஒவ்வொரு மாவட்டத்திலும் திருக்குறள் பயிலரங்கங்கள் நடத்தப்படும்.
* ஆண்டுக்கு 133 கல்வி நிறுவனங்களில் திருக்குறள் தொடர்பான கலை, இலக்கிய அறிவுசார் போட்டிகள் நடத்தப்படும்.
* ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் கடைசி வாரம் திருக்குறள் வாரமாக கொண்டாடப்படும்.
* தமிழ் திறனித் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் திருக்குறள் மாநாடு நடத்தப்படும்.
* குறளும், உரையும் அரசு அலுவகங்களைப் போல தனியார் அலுவலகங்களிலும் எழுத உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
* கன்னியாகுமரி பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்படும்.
2025-ல் உலகெங்கும் அமைதி திரும்பட்டும். நம் நாட்டில் சமூக நல்லிணக்கம் தழைத்துச் செழித்தோங்கட்டும். இல்லந்தோறும் அன்பும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கட்டும்! தமிழ்நாடு அதற்கு வழிகாட்டும்! என்று தனது ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து செய்தியில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டு உள்ளார்.